மகிந்த அரசில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு

Report Print Steephen Steephen in அறிக்கை
advertisement

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு தொல்லைகள் மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மீண்டும் விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தினால், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சரவை உப குழு வழங்கிய பரிந்துரைகளை விரிவுப்படுத்தவும், யோசனைகளை முன்வைக்கவும் முடியாமல் போன நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மீண்டும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதனடிப்படையில், குறித்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான, தொல்லைகளை எதிர்நோக்கிய ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக ஊழியர்களிடம் விண்ணப்பங்களை கோர அமைச்சரவை உப குழு முடிவு செய்துள்ளது.

மேலும், யோசனைகள் மற்றும் விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கீழ் வழங்கியுள்ள முகவரிக்கு அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம்

இலக்கம், 163 கிருளப்பனை மாவத்தை, கொழும்பு - 06

தொலைநகல் -0112514753

மின்னஞ்சல் - ranga@dgi.gov.lk

அமைச்சரவை உபகுழுவின் செயலாளராக அரச செய்திப் பணிப்பாளர் பணியாற்றி வருகிறார்.

advertisement

Comments