சவூதி அரேபியாவில் புதிய சட்டம்! வெளிநாட்டவர்களுக்கு பாரிய சிக்கல்

Report Print Shalini in அறிக்கை
advertisement

சவூதி அரேபியாவில் உள்ள பாரிய வர்த்தக நிலையங்களில் சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்களை மாத்திரம் வேலையில் அமர்த்த வேண்டும் என்று சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவூதி அரேபியாவில் 2030ஆம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சவூதி அரேபியாவில் சிறு மற்றும் பாரிய தொழில் செய்யும் இடங்களில் 15 இலட்சம் பேர் வரை வேலை செய்து வருகின்றனர்.

அவர்களில் 3 இலட்சம் பேர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சவூதியில் சிறு தொழில்கள் செய்யும் துறைகளில் 5இல் ஒருவர் மட்டுமே அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதன் காரணமாகவே பாரிய வர்த்தக நிலையங்களில் சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்களை மாத்திரம் வேலையில் அமர்த்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டுக்குள் இந்த துறைகளில் சவூதி நாட்டைச் சேர்ந்த 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அரசு குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சவூதி அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான இலங்கையர்கள் உட்பட அங்கு தொழில் புரியும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

advertisement

Comments