மக்களை ஏமாற்றும் அரசியல் மீண்டும் ஆரம்பம்: முஜிபுர் ரஹ்மான்

Report Print Steephen Steephen in அறிக்கை

அரசியல் இலாபம் கருதி மீதொட்டமுல்ல குப்பைமேடு பிரச்சினையை கையில் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் அரசியல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அறிக்கையில் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது செல்லாத காசாக மாறியுள்ள மகிந்த ராஜபக்ச அணியினரின் வங்குரோத்தை மூடிமறைத்துக் கொள்ள வாசுதேவ நாணயக்கார குப்பைமேடு பிரச்சினை வைத்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக சேறுபூசும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளமை தெளிவாக புலப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினை அடிப்படையாக கொண்டு தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வாசுதேவ கூறியுள்ளதாகவும், அவரது இந்த கருத்து மந்தபுத்தி கொண்டவரின் நகைப்புக்குரிய கருத்து எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்கார அமைச்சராக பதவி வகித்த 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கமே மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாசுதேவ நாணயக்கார மறந்துள்ளமை கவலைக்குரிய விடயம்.

அத்துடன், இந்த குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்காது குப்பைக்கு எதிராக போராடிய மக்களை அச்சுறுத்தி கோத்தபாய ராஜபக்ச வன்முறையை பயன்படுத்திய போது வாசுதேவ நாணயக்கார ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. இந்த நிலையில், தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகிறார்.

மேலும், ஆடை அணிந்து கொண்டா வாசுதேவ நாணயக்கார என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கூறுகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments