வெள்ளவத்தையில் கட்டடம் உடைந்து வீழ்ந்தது ஏன்? அதன் முழுமையான தோற்றம்

Report Print Vethu Vethu in அறிக்கை
advertisement

தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் திருமண மண்டபம் ஒன்று உடைந்து வீழ்ந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகாமையிலுள்ள “எக்ஸலன்சி” திருமணம் மண்டபமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த கட்டடம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக பகுதிபகுதியாக நிர்மாணிப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த கட்டடத்தின் தரநிலை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதாக சவோய் திரையரங்கின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டடத்தின் பின் புறத்தில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கட்டடம் உடைந்து விழுவதற்கு முன்னர் காணப்பட்ட நிலை தொடர்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 25 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் இவர்களில் 13 களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சியவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் கவலைக்கிடமான முறையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement

Comments