கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

Report Print Steephen Steephen in அறிக்கை

கொழும்பில் பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக நகரில் சில வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய மரங்கள் சரிந்துள்ளதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் கொழும்பு கோட்டை டெலிகொம் அருகில், மருதானை டாலி வீதி தீயணைப்பு படை அலுவலகத்திற்கு அருகில், புறக்கோட்டை டெக்டர் கூட்டுத்தாபன சந்தி, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு பின்னால் உள்ள புல்லர்ஸ் ஒழுங்கை ஆகிய இடங்களில் மரங்கள் சரிந்துள்ளன.

இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொது மக்களுக்கும் குறித்த வீதிகளினூடு பயணிக்கும் சாரதிகளுக்கும் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments