ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 150 பேர் டெங்குவினால் உயிரிழப்பு

Report Print Kamel Kamel in அறிக்கை

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் இவ்வாறு டெங்குவினால் பாதிக்கப்பட்ட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த காலப் பகுதியில் 60,800 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் பிரமிலா சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.