யாழ். உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்

Report Print Sujitha Sri in அறிக்கை

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மின்சார விநியோகத் தடையானது காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், வெற்றிலைக்கேணி உட்பட பல பகுதிகளில் மின் விநியோக தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் ஒரு பகுதி, பாப்பாமோட்டை, பரப்பாங்கண்டல், வட்டக்கண்டல், குருவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும், வவுனியா மாவட்டத்தின் தெற்கு இலுப்பைக்குளம் பகுதியிலும் மின் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடிக்கடி மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You may like this video