கடுமையாக்கப்பட்ட சட்டத்தில் சிக்கிய சாரதிகள்

Report Print Sujitha Sri in அறிக்கை

வாகனங்களுக்கான வீதி விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய 1,190 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் வாகனங்களுக்கான வீதி விதிகள் நேற்று முதல் கடுமையாக செயற்படுத்தப்பட்டன.

இந்த நிலையிலேயே அமுல்படுத்தப்பட்ட குறித்த சட்டங்களை மீறிய சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சாரதிகளுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடவும், வார இறுதியில் நடத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான வகுப்புக்களுக்கு அழைக்கவும் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.