நாட்டு மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in அறிக்கை

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனைவருக்கும் இலவச இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வை-பை (wi-fi) வழங்கும் செயற்றிட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டாலும், அளித்த வாக்குறுதிக்கு அமைய விரைவில் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 3 வருட காலப்பகுதியினுள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே தடவையில் ஏற்படுத்திக் கொடுப்பது முடியாத காரியம்.

முதற்கட்டமாக சில பாடசாலைகளுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.