ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

Report Print Steephen Steephen in அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

போலி ஆவணம் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

முறைப்பாட்டில் முதலாம் இரண்டாம் சாட்சியாளர்களாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இரண்டு சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் அரச பணிகள் காரணமாக அவர்களால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி விடுத்த கோரிக்கை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க நாணயக்கார, சாட்சியாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

advertisement