சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை

Report Print Steephen Steephen in அறிக்கை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கடந்த 2011ம் ஆண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ரொஷான் சானக என்பவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மாஹநாம திலகரத்ன ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் கடந்த 13ம் திகதி ரொஷான் சானகவின் தாயாருக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தகவல்களை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதி கொள்ளையிட முயற்சிப்பதாக கூறி, சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ரொஷான் சானக உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மஹாநாம திலகரத்ன தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

எனினும், அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.