வடக்கில் 27 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

Report Print Sumi in அறிக்கை

கணித, விஞ்ஞான பாடங்களுக்காக பட்டதாரிகள் 27 பேருக்கு இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண கல்வி அமைச்சில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

பட்டதாரி நியமனத்திற்காக இடம்மெற்ற நேர்முகத் தேர்வின்போது சான்றிதழ் சமர்ப்பிக்கத் தவறிய நிலையில் காலம் தாழ்த்தி சான்றிதழை வழங்கிய 27 பட்டதாரிகளுக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான வெற்றிடத்திற்கு கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி 219 பேருக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் அவர்களில் 181 பேர் தமது கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 418 கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டது.

அவ்வாறு காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2017.02.09 அன்று பத்திரிகைகள் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தன.

இதற்காக விண்ணப்பித்த 353 பட்டதாரிகளில் நேர்முகத்தேர்வின் போது 219 பேர்மட்டுமே தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டனர்.

இருப்பினும் சில பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றிய போதும் சான்றிதழ் கைவசம் இன்மை காரணமாக சான்றிதழைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்தனர்.

அக்கோரிக்கையின் பிரகாரம் அவர்களுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அவர்களுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தின் பிரகாரம் 27 பட்டதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

advertisement