பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பொதுக் கூட்டம் கொழும்பில்

Report Print Ajith Ajith in அறிக்கை

பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் கூட்டமைப்பின் 20வது வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

41 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400ற்கும் அதிகமான பிரமுகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பொதுக்கூட்டம் கடந்த 15ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் 21ம் திகதிவரை 7 நாட்களுக்கு இடம்பெறுகிறது.

இலங்கை சார்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் ஏனைய பல முக்கியஸ்தர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளைச் சேர்ந்த நிதித்துறை சார் நிபுணர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.