யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை

Report Print Thamilin Tholan in அறிக்கை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், நாவற்குழி, மறவன்புலவு, தச்சன் தோப்பு, தனங்களப்பு, கோயிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் இந்த மின்தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.