விண்ணுக்கு செயற்கைகோளை ஏவிய மஹிந்தவின் மகனுக்கு சிக்கல்!

Report Print Vethu Vethu in அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்வதற்காக, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட SupremeSAT - 1 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் திட்டம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்காகவே ரோஹித அழைக்கப்பட்டுள்ளார்.

சுப்ரிம் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவில் பிரதான பொறியியலாளராக ரோஹித செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுப்ரிம்செட் செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக 320 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை எனவும், அரசாங்க பணம் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.