நல்லூர் தேர், தீர்த்தோற்சவ நாட்களில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியவர்களின் முக்கிய கவனத்திற்கு

Report Print Thamilin Tholan in அறிக்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுத் தேர், தீர்த்தோற்சவ நாட்களில் தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியார்களுக்கு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் முக்கிய வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தெரிவித்துள்ளதாவது,

இம்முறை நல்லூர் கோவில் வடக்கு வீதியூடாக (சங்கிலியன் வீதியூடாக கோவில் வீதி வடக்குப் பக்கமாக) துர்க்காமணி மண்டபத்தை அடைந்து வடக்கு வீதியில் குபேர கோபுர வாசலை அடைந்து அங்கு நேர்த்தியை முடிவுறுத்தவும்.

பின்னர் தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடியுடன் வந்த வாகனம் நல்லூர் தெற்கு வீதியூடாக (கைலாச பிள்ளையார் கோவிலடிப் பக்கம்) வெளியேறவும்.

அத்துடன் சுவாமி வெளிவீதி உலா வந்து இருப்பிடத்தை அடையும் வரையிலான குறித்த நேரத்தைக் கருத்திற்கொண்டு தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடி எடுத்து நேர்த்தி செய்யும் அடியார்கள் ஆலய வீதிக்குப் பிரவேசிக்குமாறும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.