குளிர்பான வகைகளுக்கு வரி

Report Print Kamel Kamel in அறிக்கை

குளிர்பான வகைகளுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இனிப்புச் சுவையுடைய குளிர்பான வகைகளுக்கு வரி விதிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தர நிர்ணயங்களுக்கு அமைய 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு 6 கிராம் சீனியே சேர்க்கப்பட வேண்டும்.

இதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராமிற்கும் ஒரு ரூபா என்ற அடிப்படையில் வரி விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பு ஊடகமொன்றிட்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.