நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் பொருட்களைத் தவறவிட்டவர்களா நீங்கள்?

Report Print Thamilin Tholan in அறிக்கை

யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா நேற்று முன்தினம் வைரவர் மடையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் பக்தர்களால் தவறவிடப்பட்ட கைக்கடிகாரம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டை உள்ளிட்ட பல பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளது.

இவ்வாறு பொருட்களைத் தவறவிட்ட உரிமையாளர்கள் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.