கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற கனேடிய பிரஜைகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in அறிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையில் செயற்படும் பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் பயணம் செய்வதற்காக ஏற்கனவே டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

இன்றையதினம் பயணம் மேற்கொள்வதற்காக விமான நிலையம் சென்ற போது, அவர்களின் பயணத்தை தொடர முடியாமல் போயுள்ளது.

விமானம் பயணமாவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் சென்ற கனேடிய பிரஜைகள், எயார்லைன்ஸ் காரியாலத்தில் டிக்கெட்டை பரிசோதிக்க ஒப்படைந்துள்ளனர்.

எனினும் குறித்த விமான ஆசனங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணிக்க இடமில்லை என காரியால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிருப்பதி அடைந்த கனேடிய பிரிஜைகள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதுவரை தமக்கான மாற்று நடவடிக்கைகள் எதனையும் விமான சேவைகள் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் எப்படி தமக்கு டிக்கெட் விநியோகிக்க முடிந்தது மற்றும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்காமை குறித்து விசாரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.