யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Report Print Thamilin Tholan in அறிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான சி. கலாராஜ்ஜிற்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து இன்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

யாழ். பல்கலைக்கழகப் பெண் ஊழியர் ஒருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் தகாத முறையில் நடந்துள்ள நிலையில் குறித்த நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை(08) பல்கலைக்கழக ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் தமது போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளை பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்

சங்கத்தினர் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் குறித்த சம்பவம் தொடர்பிலும், தமது போராட்டத்தின்

நியாயப்பாடுகள் தொடர்பிலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்திய வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க மொன்றின் தலைவர், இணைச் செயலாளரை நோக்கி “கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் அடிக்க வேண்டி வரும்” என கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.

மேலும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தான் அஞ்சப் போதில்லை எனவும் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

advertisement