துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி! குற்றவாளிக்கு 50 வருட சிறைத்தண்டனை

Report Print Shalini in அறிக்கை

கண்டி- தியத்தலாவ பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பாடுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

தியத்தலாவ - எல்லாகம பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு அதே பகுதியைச் சேர்ந்த குற்றவாளிக்கு 50 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.