இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்

Report Print Ajith Ajith in அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்டஈடு வழங்கல் உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கையாளர் Pablo de Greiff எதிர்வரும் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 36ஆவது அமர்வில் வைத்து அவர் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Pablo de Greiff எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார். இந்த காலப்பகுதியில் அவர் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டும் Pablo de Greiff இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.