வடமாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு நாளை இடம்பெறாது

Report Print Thamilin Tholan in அறிக்கை

வாரம்தோறும் புதன்கிழமைகளில் யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் பணிமணையில் வடமாகாண ஆளுநர் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நாளை புதன்கிழமை(13) இடம்பெறாதென ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.சோமசிறி தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் வாரம் தோறும் புதன்கிழமைகளில் சுண்டுக்குளியிலுள்ள ஆளுநர் பணிமனையில் மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் நாளைய தினம் மக்கள் சந்திப்பு இடம்பெற மாட்டாது எனவும் எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை வழமை போன்று மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.