சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Report Print Aasim in அறிக்கை

இலங்கையில் சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்ப ​போதுமான அளவில் சட்டத்தரணிகள் இன்மை காணப்படுவதாகவும் சட்டத்தரணிகள் தொகையை அதிகரிப்பதன் ஊடாக நீதித்துறை செயற்பாடுகளை விரைவுபடுத்த முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற சட்டக்கல்லூரி அனுமதிக்கான பரீட்சைக்கு 5139 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். எனினும் அவர்களில் 239 பேரே சட்டக்கல்லூாரிக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு சட்டத்துறை படிப்பில் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தவும், பிராந்திய ரீதியாக சட்டக்கல்விக்கான நிலையங்களை அமைக்கவும், சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையை பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.