போக்குவரத்து சபையில் வெறுமனே சம்பளம் பெறும் ஊழியர்கள்

Report Print Aasim in அறிக்கை

இலங்கை போக்குவரத்து சபையில் எதுவித கடமையும் ஆற்றாமல் வெறுமனே சம்பளம் பெறும் ஊழியர்கள் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதிநெருக்கடி காரணமாக போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு மாதாந்த ஊதியம் தவணை முறையில் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதுவித கடமைகளும் ஆற்றாமல் ஊழியர்கள் 508 பேர் வெறுமனே ஊதியம் மட்டும் பெற்றுக் கொண்டிருக்கும் பாரிய முறைகேடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஊழியர் சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

குறித்த ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெற்றுச் செல்ல விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை கொடுக்கப்படவில்லை.

அதன் காரணமாக தொடர்ந்து அலுவலகத்துக்கு சமூகமளித்து ஊதியம் பெற்று வருகின்றனர்.

எனினும் அவர்கள் ஓய்வுபெற விண்ணப்பித்திருப்பதால் அவர்களுக்கு எதுவித கடமைகளையும் பகிர்ந்தளிக்க முடியாதிருப்பதாக போக்குவரத்துச் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பத்துமாத காலமாக நடைபெறும் இந்த முறைகேடு காரணமாக போக்குவரத்துச்சபை பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டு வருவதாக ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.