இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் ஐ.நா!

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவது முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரு வருடங்களுக்கு முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, போர்க்குற்றம் உட்பட மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கை நாட்டு மக்களுக்காக மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறுதலளிப்பதற்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் இடம்பெறும் 36வது மனித உரிமை மாநாட்டு ஆரம்ப உரிமை நிகழ்த்திய மனித உரிமை ஆணையாளர் சய்ட் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கை இணைந்து சமர்ப்பித்து கொண்ட, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை கட்டியெழுப்பும் தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள மக்களினால் கண்டனம் வெளியிடப்பட்டது.

வெளிநாட்டு சக்திக்கு அவசியமான முறையில் நாட்டை காட்டி கொடுப்பதற்கு திட்டமிடும் நடவடிக்கை என அந்த தரப்பினரால் கூறப்பட்டது.

எனினும் ஜெனிவா யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, இடைவழி நீதி பொறிமுறையை செயற்படுத்துவதென்பது இலங்கை மக்களுக்கான நிறைவேற்றப்பட வேண்டிய கடமை என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்காக ஒரு தெளிவான கால அட்டவணை மற்றும் நிபந்தனையை தயாரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கை நிறைவேற்றாத வாக்குறுதிகளுக்காக இன்னும் இரு வருட கால அவகாசம் வழங்குவதற்கு சர்வதேச முக்கியஸ்தர்கள் இந்த வருடம் மார்ச் மாதம் தீர்மானம் மேற்கொண்டனர்.

இது தங்கள் நாட்டு மக்களின் உரிமைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டாய பொறுப்பே தவிர காலங்களை விரயம் செய்து சபையை ஆறுதல்படுத்த அரசாங்கம் செயற்பட கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டரீதியாகப்பட்டு ஒரு வருடத்திற்கும் அதிக காலம் கடந்துள்ள நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக செயற்படுத்துமாறு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படாமையினால், அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பல மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாக ஐ.நா மாநாட்டில் ஆணையாளர் நினைவு கூர்ந்துள்ளார்.