தமிழர்கள் என்றால் அப்போது “தலையா” இப்போது “கொட்டியா”! ராஜித கூறும் கதை

Report Print Shalini in அறிக்கை

தமிழர்கள் என்றால் புலிகள் என்றுதான் மஹிந்த தரப்பினர் தெரிவிக்கின்றனர். நாம் கல்வி கற்கும் காலத்தில் புலிகள் இருக்கவில்லை. என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அப்போதைய காலத்தில் தமிழர்களை “தலையா” என்று கூறினார்கள். தலதெல் (நல்லெண்ணெய்) வைப்பதால் ஆரம்பத்தில் தமிழர்களை “தலையா” என்றார்கள்.

தொடர்ந்து புலிகளின் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் “கொட்டியா (புலிகள்)” என்று கூறுகின்றார்கள்.

பாஸ்கரலிங்கத்தின் பெயர் தமிழ் என்பதால் அவரை புலி என்று கூறுகின்றார் பந்துல.

பாஸ்கரலிங்கம் நிதியமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 125 மில்லியன் ரூபாவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக அவர் குற்றம் சுமத்துவது உண்மை என்றால் நிரூபித்து காட்டட்டும் என்று ராஜித சவால் விடுத்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற போது அதற்கு தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா. யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை அவர் நன்கு அறிவார். அதே போன்று இராணுவ வீரர்கள் யுத்தமீறல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும்.

கிருஷாந்தினி கொலை மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இவர்களை இராணுவ வீரர்கள் என்று விட்டுவிடவில்லை, குற்றம் செய்தமைக்காக தண்டனை கொடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

எனினும் யுத்தத்தின் போது நாம் அனைவரும் பங்குபற்றினோம். இதனால் யுத்தத்தில் பங்குபற்றினார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.