வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பின் பல பகுதிகள்

Report Print Vethu Vethu in அறிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பொரளை கிங்சி வீதி, தும்புல்ல சந்தி, தாமரை தடாக சுற்றுவட்ட பாதை மற்றும் மாளிகாவத்தை மாடி வீட்டு கட்டடத்தொகுதி பகுதி நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.