லலித் மற்றும் அனுஷவின் பிணை கோரிக்கை நாளை பரிசீலனை

Report Print Ajith Ajith in அறிக்கை

சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கொழும்பு மேல்நீதிமன்றில் நாளை(14) பரிசீலிக்கப்படவுள்ளது.

பிக்குகளுக்கான ஆடை பகிர்ந்தளிப்பின்போது இடம்பெற்ற மோசடி குற்றச்சாட்டில் மேற்படி இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், தலா 2 மில்லியன் ரூபா அபராதமும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு தலா 50 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்றின் இந்தத் தீர்ப்பை அதிகாரமற்றதாக்க வேண்டும் என அவர்களது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, அந்த மனுவை பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்வரை பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு மேல்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.