வெளிநாடு சென்று காணாமல் போன இலங்கைப் பெண்கள்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Report Print Vethu Vethu in அறிக்கை

சவுதி அரேபியாவில் தொழிலுக்காக சென்று எவ்வித தகவலும் கிடைக்காத நபர்களை கண்டுபிடிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

8 பெண்கள் அடங்கலாக 10 பேர் இதுவரையில் காணாமல் போயுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் இல்லை என அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான தகவல் கிடைத்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் 011-4379328 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளலாம். அல்லது அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

01.D.W.கமனி சியதலா - வெளிநாடு சென்ற வருடம் 2006.05.24 - வசிப்பிடம் - உஹன, அம்பாறை

02.N.இந்திரானி - வெளிநாடு சென்ற வருடம் 1993.10.29 - வசிப்பிடம் -பரகன்தெனிய இம்புல்கொட

03.K.I.முத்துமெனிக்காகா - வெளிநாடு சென்ற வருடம் 2008.11.24 - வசிப்பிடம் - லக்கல, பல்லேக

04.W.A.பார்லி வீரசிங்க - வெளிநாடு சென்ற வருடம் 2004.08.05

05.W.D.அமித்தா ஜயசிங்க - வெளிநாடு சென்ற வருடம் 2007.09.01 - வசிப்பிடம் - ராஜாங்கனை

06. பெரியசாமி முத்து மாரியம்மா - வெளிநாடு சென்ற வருடம் 2012.01.11 - வசிப்பிடம் - புந்தலுஓய

07.P.L.பத்மினி - வெளிநாடு சென்ற வருடம் 2010.05.20 - வசிப்பிடம் - நிவித்திகல

08.M.A.காதர் பசீலா - வெளிநாடு சென்ற வருடம் 2008.01.31 - வசிப்பிடம் - கந்தபளை

09.P.K.சுகத் - வெளிநாடு சென்ற வருடம் 2008.08.12 - வசிப்பிடம் - தெஹிஅத்தகண்டிய

10. C.சந்திரசேகரம் சந்திரமலர் - வெளிநாடு சென்ற வருடம் ච 2010.01.25- வசிப்பிடம் - கோமாரி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கமைய 2016அம் ஆண்டு ஏப்ரல் மாத தொழில் அனுமதி பத்திரத்துடன் சவுதி அரேபியாவில் தொழில் செய்யும் இலங்கையர்களின் எண்ணிக்கை 182,403 ஆகும்.