2018இல் அரசாங்க ஊடக விருது வழங்கும் விழா

Report Print Aasim in அறிக்கை

நடப்பு ஆண்டிற்கான அரசாங்க ஊடக விருதுகளை வழங்கும் விழா எதிர்வரும் 2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அச்சு மற்றும் இலத்திரனியல் துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த அரசாங்க ஊடக விருதுகள் இம்முறை முதற்தடவையாக இணையத்தள ஊடகங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதன் பிரகாரம் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ஊடகம் எனும் நான்கு பிரிவுகளின் கீழ் ஊடக விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் இதுவரை காலமும் நடைபெற்று வந்த ஊடக விருதுகள் வழங்கும் விழாவை இனி வரும் ஆண்டுகளில் ஊடக அமைச்சின் மூலம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.