2020 தொடக்கம் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட நடவடிக்கை

Report Print Aasim in அறிக்கை

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தொடக்கம் நகர்ப்புறத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான ஏற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின், அருவக்காடு பிரதேசத்தில் இதற்கான காணி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான நிலக்கீழ் கிடங்குகள், குப்பை கையாளும் நிலையம் மற்றும் அவ்விடத்திற்கான புகையிரத பாதை நிர்மாணம் போன்ற பணிகள் தற்போது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சீமெந்துத் தொழிற்சாலைகள் காரணமாக ஏற்கெனவே சுவாசத் தொகுதி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குப்பை கழிவுகள் காரணமாக பல்வேறு தொற்று நோய்களாலும் தாம் பாதிக்கப்படலாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.