பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒலித்த காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள்!

Report Print TGTE Canada Media in அறிக்கை

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேட்போர் கூடத்தில் இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ஒலித்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளினையொட்டி கருத்தரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் பிரதிநிதி அன்றூ உட்பட பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர் மணிவண்ணன் ஆகியோர் பிரதான கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து இயக்கம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.