லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Shalini in அறிக்கை

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதன்போது, குறித்த பிணை தொடர்பில் விளக்கமளிக்க இந்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 20ஆம் திகதி சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விளக்கமளித்த பின்னர் பிணை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்நீதிமன்றின் தீர்ப்பை அதிகாரமற்றதாக்க வேண்டும் என லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவை பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு மேல்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளே இன்று இடம்பெற்றிருந்தது.

மேலும், கடந்த ஆட்சி காலத்தில், பிக்குகளுக்கான ஆடை பகிர்ந்தளிப்பின்போது இடம்பெற்ற மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், தலா 2 மில்லியன் ரூபா அபராதமும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு தலா 50 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement