இரட்டை கொலை! 22 வருடங்களுக்குப்பின் நால்வருக்கு மரணதண்டனை

Report Print Shalini in அறிக்கை

கேகாலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி கேகாலைவில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு இன்று குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு நபர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.