நோர்வே நாட்டிற்கு முதலாம் இடம்! இலங்கைக்கு 70வது இடம்

Report Print Murali Murali in அறிக்கை

உலக பொருளாதார மன்றத்தின் பூகோள மனித மூலதன சுட்டெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள சுட்டெண் பட்டியலில் நோர்வே முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

அத்துடன், இந்த பட்டியலில் இலங்கை 70ஆவது இடம் கிடைத்துள்ளது.

130 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, ஒரு நாடு எவ்வாறு மனித மூலத்தினை விருத்தி செய்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் நேபாளம் 98வது இடத்திலும், பங்களாதேஷ் 111வது இடத்திலும், பாகிஸ்தான் 125வது இடத்திலும் இருக்கின்றன.

இதேவேளை, கல்வித்தகைமை, தொழிற்படை, தொழிற்துறையினரின் தொழில்சார் அறிவு, தொழிலாளர் உரிமைகள் போன்ற விடயங்களை கருத்தில்கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.