2016ஆம் ஆண்டில் 405 பேர் புகையிரத விபத்துக்களில் பலி

Report Print Aasim in அறிக்கை

கடந்த 2016ஆம் ஆண்டு 405 பேர் புகையிரத விபத்துக்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டிலும் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 300 இற்கும் அதிகமானவர்கள் புகையிரத விபத்துக்களின் மூலமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதிக்குள் மட்டும் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

புகையிரத நிலையங்களில் வண்டி நிறுத்தப்பட முன்னதாக ஏற முற்படல், இறங்குவதற்கு முயற்சித்தல் போன்ற சந்தர்ப்பங்களிலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தடுக்கும் வகையில் புகையிரதம் மற்றும் நடைமேடைக்கு இடையிலான இடைவௌியைக் குறைப்பது தொடர்பில் புகையிரத திணைக்களம் ஆலோசித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று தென்னிலங்கைக்கான புகையிரத பாதை பெரும்பாலும் கடற்கரையோரமாக அமைந்திருப்பதன் காரணமாக கடற்காற்றின் இரைச்சல் ஓசையால் தண்டவாளத்தில் நடக்கும் பாதசாரிகளுக்கு புகையிரதம் வரும் சத்தத்தை செவிமடுக்க முடியாத நிலையும் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணமாக அமைந்துள்ளது.