இலங்கையில் புதிய அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி சமவுரிமையை வழங்குவதாக வாக்குறுதியளித்த போதிலும் இதுவரை அது நடைபெறவில்லை.
தமிழர்களின் பகுதிகளில் இராணுவ பிரசன்னங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றது என ஜெனிவாவில் நடைபெறும் 36ஆவது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தொடர்பில் வைகோ உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர்.