கூட்டு எதிர்க்கட்சியினரின் போராட்டத்தில் மோசமாக நடந்துகொண்ட பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Shalini in அறிக்கை

ஹம்பாந்தோட்டையில் கூட்டு எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தங்காலை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த A.S.P. Daluwaththa (தழுவத்த) மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரால் ஹம்பாந்தோட்டையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துவரும் போது, A.S.P. Daluwaththa குறித்த இளைஞனின் கண்ணத்தில் அடித்துள்ளார்.

மிகவும் மோசமான முறையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்தன.

மேலும், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் Daluwaththa உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.