இளைஞன் மீது கொடூர தாக்குதல்! யாழில் பொலிஸாரின் அட்டகாசம்

Report Print Vethu Vethu in அறிக்கை

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதுடன், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞனை, அவரின் பெற்றோர் முன்னிலையில் மானிப்பாய் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளார். கடுமையாக தாக்கிய இளைஞனை பொஸிஸார் வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றுக்கு வாகனத்தில் சென்ற பொலிஸார் அங்கிருந்த இளைஞன் ஒருவனை பெற்றோர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை தடுக்க முற்பட்ட அவரது தாயாரையும் ஒரு பொலிஸ்ஸார் தாக்க முற்பட்டுள்ளார். எனினும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவை அவதானித்த மற்றைய பொலிஸார் அதனை தடுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். குறித்த இளைஞன் ஒரு ஆஸ்த்துமா நோயாளி எனவும் தெரிய வருகின்றது.

பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் அந்தப் பகுதி் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.