வவுனியாவில் சரமாரியாக வாள் வெட்டு! பொலிஸார் குவிப்பு

Report Print Theesan in அறிக்கை

வவுனியா - ஓமந்தை, நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் உணவகத்திற்கு முன்பாக இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மூவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் புதியசின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும், நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் வாள்வெட்டில் காயமடைந்த மயூரன் (வயது-29), நிதர்சன் (வயது-22), சங்கீதன் (வயது-38) என்பவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி, முள்ளுக்கம்பி, கத்திகள் என்பவற்றை ஓமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இரு கிராம இளைஞர்களுக்கிடையே பல தடவைகள் மோதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.