திடீரென ஏற்பட்ட குழப்பம்! மக்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

Report Print Vethu Vethu in அறிக்கை

கேகாலை - அவிசாவளை பிரதேசத்தில் நேற்றிரவு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு மேற்கொண்டுள்ளனர்.

அந்த பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்தை தொடர்ந்தே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.