கடத்தலுக்கும் சரத் பொன்சேகாவிற்கும் தொடர்பா? புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்

Report Print Shalini in அறிக்கை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயார் கடத்தல் வழக்கு விசாரணைகள் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயத்தை புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இந்த வழக்கு விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை இராணுவம் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது

தமது தலையீட்டினாலேயே ஊடகவியலாளர் கீத் நொயாரின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும், தாமே கடத்தல் குறித்த தகவலை அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், எவ்வாறு கரு ஜயசூரிய கீத் நொயாரின் உயிரைக் காப்பாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.