வாகன சாரதிகளுக்கு நெருக்கடி! இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

Report Print Sujitha Sri in அறிக்கை

33 போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத பணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி இந்திக்க ஹப்புகொடவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை 23 குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது 33 குற்றங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. அபராத பணமும் 30 - 50 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான அபராத பணத்தை 3000 ரூபாய் வரையிலும், பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவுகளை செவிமடுக்காமைக்கான அபராதம் 2000 ரூபாய் வரையிலும் அதிகரிப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அபராதங்களை செலுத்துவதற்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அபராதம் விதிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களின் பின் செலுத்தப்படுகின்ற அபராதம் இருமடங்காக அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.