மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறங்கிய தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விஷேட விமானம்

Report Print Shalini in போக்குவரத்து

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா பயணித்த விசேட விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் குறித்த விமானம் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பவும், ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்குமே தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் சூமா பயணித்த விமானம் கட்டுநாயக்கவில் இறக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் சூமா சீனாவில் இடம்பெற்ற “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தனது நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போதே எரிபொருள் தேவைக்காக விமானத்தை தரையிறக்கியுள்ளனர்.

இதேவேளை, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் சூமாவின் விமானம் இந்த மாதம் 1ஆம் திகதியும் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.

சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜாக்கோப் சூமாவின் விசேட விமானம் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.