இரவு நேரத்தில் மர்மமான முறையில் செயற்பட்ட மாணவர்கள்! துரத்திப் பிடித்த பொலிஸார்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

அனுராதபுரத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய 5 பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரம் இல்லாத முச்சக்கர வண்டி ஒன்று ஓட்டி செல்லும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் புளியங்குளம் ரயில் வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபடுவதாக பொலிஸருக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸ் அவசர பிரிவு அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது, அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

அதன் பின்னர் துரத்தி சென்று அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் குறித்த ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும், அல்லது போதை பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


you may like this video..