கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் - மத்தல செல்லும் விமானங்கள்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த UL 122 மற்றும் UL708 விமானங்களே மத்தலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் இலங்கை வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏனைய விமானப் பயணங்களில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.