அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

Report Print Kamel Kamel in போக்குவரத்து

அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பில் நாடாளுமன்றில் எதிர்வரும் 19ம் திகதி விவாதம் நடத்தவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பதில் இடம்பெறும் மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 19ம் திகதி இந்த நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளைப் போன்றே நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.