கட்டுநாயக்கவிலிருந்து சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

138 பயணிகளுடன் சென்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11. 30 இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

138 பயணிகளும் மற்றுமொரு விமானத்தினூடாக இன்று அதிகாலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.