படையினரும் விடுதலைப்புலிகளும் புரிந்த போர்க்குற்றங்கள்: பக்கசார்பின்றி விசாரணை

Report Print Ajith Ajith in பிரித்தானியா
advertisement

படையினரும் விடுதலைப்புலிகளும் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இந்த கருத்தை இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட சுயாதீன ஹைப்பிரைட் நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ஒருவர், போர் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்த யோசனைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே பிரித்தானியா, இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்கியுள்ளமையையும் குறித்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments